இலங்கையில் நடக்கவிருக்கும் பயங்கரம் இவைதான்!!!
இன்னும் சில மாதங்களில் பலருக்கு தொழில்வாய்ப்பு இல்லாமல் போகலாம் என்று, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் கூறியிருக்கிறார்.. நிலைமை அந்தளவு மோசமாக இருக்கிறது..
இது தனியொருவருக்கான பாதிப்பாக நிச்சயம் இருக்கப்போவதில்லை.. இதனால் பல குடும்பங்கள் , பிள்ளைகளின் கல்வி , எதிர்காலம் , ஆரோக்கியம் என்று பல பாதிப்புகள் ஏற்படலாம்..
ஆனால் ,மக்கள் இன்னமும் இந்த பாதிப்புகளை உணராமல் இருக்கிறார்கள்…
27,000 லீற்றர் பெட்ரோல் , 22,000 லீற்றர் டீசல் 10,000 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கிய 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்…
அவசரத்துக்கு நோயாளி ஒருவரை கொண்டு செல்ல அம்பியூலன்சுக்கு இல்லாத டீசலைத் தான் நீங்கள் பதுக்கியிருக்கிறீர்கள் என்றால், உங்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது..
