யாழில் நள்ளிரவில் பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிந்த வீட்டில் நடந்த பயங்கரம்!! ( Photos)
யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
நேற்று (16) இரவு கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்து கல்வி கற்று வரும் வீடு மீது 4 மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுப்பேர் அடங்கிய குழு தாக்குதல் நடத்தியுள்ளது
குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும், வீட்டுத் தளபாடங்களையும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்யுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

