இலங்கையில் மீண்டும் பெற்றோல் விலை அதிகரித்தது!! எவ்வளவு அதிகரிப்பு!! விபரங்கள் இதோ!
லங்கா ஐஓசி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் பெற்றோல்களின் சில்லறை விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
குறித்த விலை அதிகரிப்பு அனைத்து வகையான பெற்றோல்களுக்கும் லீற்றருக்கு 49 ரூபா என்ற அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
92 ஒக்டேன் லீட்டர் ரூபா 303.00 என்ற அடிப்படையிலும் 95 ஒக்டேன் லீட்டர் ரூபா 332.00 என்ற அடிப்படையிலும் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
