யாழ்ப்பாணத்தில் பயணிகளை அந்தரிக்கவிட்ட PPT பஸ்!! சற்று முன் சம்பவம்!! (Photos)
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த PPT தனியார் பஸ் யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியில் டீசல் கொடுக்கப்படுவதை அறிந்து பயணிகளுடன் வரிசையில் போய் நிற்கின்றது. கொழும்பிலிருந்து பருத்தித்துறை வரை பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் யாழ் நகரப்பகுதிக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு வந்துள்ளது. அங்கு வந்தவுடன் பஸ்சின் சாரதி தாங்கள் பஸ்சிற்கு டீசல் அடிப்பதற்காக வரிசையில் நிற்கப்ப போவதாகவும் காலை 8 மணிவரையும் பஸ் வரிசையில் நிற்கும் எனவும் வீட்டுக்கு அவசரமாகப் போபவர்கள் வேறு வாகனங்களில் செல்வதென்றால் செல்லுங்கள் என மிகச் சாதாரனமாகச் சொல்லிவிட்டுச் வரிசையில் பஸ்சை நிறுத்தியுள்ளார்கள். இதனால் அச்சுவேலிஇ பருத்தித்துறை போன்ற இடங்களுக்குச் செல்வதற்காக கொழும்பிலிருந்து வந்தவர்கள் பெரும் அலைச்சலுக்கு உள்ளாகி அலைந்துதிரிவதாக அங்குள்ள ஒருவர் தெரிவிக்கின்றார். குறித்த பஸ் சேவை மிக மோசமான சேவை என்பது அனைவருக்கும் தெரிந்தும் அதில் பயணம் செய்ய முற்படுபவர்கள் பலிக்கடாக்கள் என்பது தெரிந்தும் பயணிகள் அதில் பயணம் செய்வது துர்அதிஸ்டவசமானது என அந்த பஸ் சேவையைப் பற்றி அறிந்தவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஒரு வருடத்திற்குள் பல முறை குறித்த பஸ் நிறுவன பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த பஸ்சின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப் பொருள் பாவனையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.






