புதினங்களின் சங்கமம்

யாழில் தனது தந்தையின் 60 ஆயிரம் பணத்தைத் திருடி நண்பர்களுக்கு சாராய பார்ட்டி வைத்த 17 வயதான பிரபல பாடசாலை மாணவன்!! பொலிசாரிடம் அகப்பட்டது எப்படி?

தனது பிறந்தநாளுக்கு தந்தையின் பணத்தை திருடி தனது பாடசாலை நண்பர்களுக்கு சாராயப்பார்ட்டி வைத்த 17 வயதான மாணவனை பொலிசார் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள். தனது பண அட்டையிலிருந்து 60 ஆயிரம் ரூபா பணத்தை தனக்கு தெரியாது யாரோக எடுத்துவிட்டார்கள் என தந்தை கொடுத்த முறைப்பாட்டை விசாரித்த போதே யாழில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 17 வயதான மாணவன் அகப்பட்டுள்ளார். தந்தையின் பண அட்டையை திருடி பணத்தை எடுத்த பின்னர் தனது தந்தையின் தொலைபேசிக்கு வரும் பணம் எடுத்ததற்கான அலேட் மெசேஜ்சையும் தந்திரமாக மகன் அழித்துள்ளார். தந்தை இன்னொருதடவை வங்கியில் பணம் எடுக்க சென்ற போது 60 ஆயிரம் ரூபா பணம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தன்னியக்க பண இயந்திரத்தில் வரும் பற்றுச்சீட்டில் இருந்து அறிந்துள்ளார். இதனையடுத்து வங்கியில் பணம் எடுத்தால் தனது தொலைபேசிக்கு அலேட் வருமே என நினைத்து தொலைபேசியை பரிசோதித்த போது அவ்வாறான அலேட் இருக்கவில்லை. இதனையடுத்து வங்கியுடன் தொடர்பு கொண்ட தந்தை தனது பணம் காணாமல் போனது தொடர்பாக முறையிட்டுள்ளார். வங்கியின் அறிவுறுத்தலுக்கு இணங்க பொலிசாரிம் முறையிட்டு ஓரிரு வாரங்கள் கழிந்த நிலையில் பொலிசாரின் தீவிர விசாரணையில் தந்தையின் பணத்தை மகனே களவாடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகனை பிடித்து தீவிர விசாரணை செய்த பொலிசார் மகனின் நண்பர்களான பிரபல பாடசாலை மாணவர்கள் சிலரையும் விசாரணைக்குட்படுத்தினர். பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் களவெடுத்த பணத்தில் யாழ் அரியாலை கிழக்குப் பகுதியில் வீடு ஒன்றை நாள் வாடகைக்கு எடுத்து தனது பாடசாலை நண்பர்களான 30 பேருக்கு ஆடு அடித்து சாராய பார்ட்டியும் வைத்துள்ளார் கில்லாடி மகன். மகனின் இச் செய்கையை பொலிசார் மூலம் அறிந்து அதிர்ச்சிடைந்த தந்தை இச் சம்பவத்திற்கு மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பொலிசாரைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.