யாழ் சாவகச்சேரியில் புகையிரதம் மோதி மாணவன் பலியான பரிதாபம்!! (வீடியோ)
சாவகச்சேரியில் புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று (24) மாலை இந்த சம்பவம் நடந்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவி புகையிரதமே மாணவனை மோதியது.
<
வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 18 வயதான பானுஜன் என்ற மாணவனே உயிரிழந்தார்.
மந்துவில் பகுதியை சேர்ந்த மாணவனே உயிரிழந்தார்.
வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நாளை இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிற்காக உடை தைத்துக் கொண்டு, சென்றதாகவும், புகையிரத கடவையை கடந்த போது விபத்திற்குள்ளானதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

