யாழில் ஆசிரியரான கணவனின் செல்போனில் பழைய மாணவியின் நிர்வாண புகைப்படங்கள்!! பொலிசாரிடம் ஒப்படைத்தார் மனைவி!!
யாழில் தனது கணவனின் தொலைபேசியில் யுவதி ஒருவரின் நிர்வாண புகைப்படங்கள் இருப்பதைக் கண்ட மனைவி அந்த தொலைபேசியை பதுக்கி வைத்துவிட்டு புகைப்படங்கள் தொடர்பாக கணவனிடம் விசாரணை செய்ய முற்பட்டுள்ளார். இதன் போது கணவன் மனைவியை தாக்கியதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து கணவனின் தொலைபேசியுடன் பொலிஸ்நிலையத்தில் தஞ்சம் புகுந்த மனைவி குறித்த புகைப்படங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துமாறு பொலிசாரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து கணவனை பொலிஸ் நிலையம் வரவழைத்த பொலிசார் புகைப்படங்கள் தொடர்பாக விசாரணை நடாத்திய போது அது தான் முன்னர் படிப்பித்த பாடசாலை ஒன்றில் மாணவியாக இருந்து தற்போது தனியார் கல்விநிலையம் ஒன்றில் கடமையாற்றும் யுவதி என கூறியுள்ளார், அத்துடன் குறித்த யுவதி தனக்கு மெசேஞ்சர் மூலம் இப் புகைப்படங்களை அனுப்பி தனது உடல் தொடர்பான அபிப்பிராயத்தை கேட்டதாகவும் அதற்கு தான் பதில் அளித்து வந்ததாகவும் குறித்த ஆசிரியர் கூறியுள்ளார். இதனையடுத்து பொலிசாரால் ஆசிரியர் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார், ஆனாலும் மனைவி இதில் சமாதானம் அடையாது கணவனை கைது செய்து சிறையில் அடைக்குமாறு பொலிஸ் நிலையத்தில் கத்திக் குளறியதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

