புதினங்களின் சங்கமம்

பெரியகல்லாறில் சோகம் – கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன் (Photos)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று மாலை ஓடையில் நீராடிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்துள்ளார்.

நாளை திங்கட்கிழமை பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்தின் உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்குஇளைஞர்களுடன் சென்று பொழுதை கழித்துக்கொண்டு இளைஞர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் நீரிழ் மூழ்கியுள்ளார்.

இதன்போது மற்றைய நபர் குறித்த நண்பரை காப்பாற்ற சென்றபோது அவரும் மூழ்கியுள்ளார்.இந்த நிலையில் அங்கு நின்றவர்களினால் காப்பாற்றச்சென்றவர் காப்பாற்றப்பட்ட நிலையில் மூழ்கியவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் சுமார் 45நிமிடங்களுக்கு பின்னர் குறித்த நபர் மீட்கப்பட்டு இருவரும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மூழ்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பெரியகல்லாறு கலைமகள் வீதியைசேர்ந்த 20வயதான தே.தீமோதி ஆகாஸ் என்னும் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இளைஞன் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.