19 வயதான கர்ப்பிணிப் பெண் சரணிகா வழுக்கி வீழந்து மரணம்!!
வீட்டில் சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை (29) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் – சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சலராசா சரணிகா எனும் 19 வயதுடைய கர்ப்பிணி பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று காலை சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

