நேர்த்திக்கடன் செலுத்த சென்ற தம்பதி; இடிந்து விழுந்த தேவாலய கூரை:கணவன் படுகாயம்!! (Photos)
வடமராட்சி கிழக்கு புல்லாவெளியில் ஆலய முகப்பு இடிந்து விழுந்து கட்டைக்காட்டை சேர்ந்த வினோத் என்னும் இளைஞன் படுகாயம்.
இரண்டு கால்களும் முறிந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தேவாலயத்திற்கு நேற்றய தினம் தம்பதியாக வருகைதந்திருந்த குடும்பம் ஒன்று அங்கேயே தங்கியிருந்த நிலையில் இன்று வியாழன் அதிகாலை 5.30 மணியளவில் தேவாலயத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்திருக்கின்றது.
இதன்போது அங்கிருந்த இளம் குடும்பஸ்தரைான இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்தசம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.





