புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

உண்டியல் மூலம் காசை அனுப்ப வெளிநாட்டு தமிழர்களுக்கு தடை போட ஆயத்தமாகும் இலங்கை!! நடக்கப் போவது என்ன?

இலங்கையில் உள்ள உறவுகளுக்கு, தமிழர்கள் உண்டியல் மூலம் பணம் அனுப்புவது வழக்கம். தாம் வசிக்கும் நாட்டில் காசை கொடுத்தால், இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு ஒரு நபர் அந்த காசை அனுப்பி வைப்பார். அதற்கு ஆப்பு வைக்க கோட்டபாய கடும் திட்டம் ஒன்றை போட்டுள்ளார். இலங்கை திறை சேரியில் அமெரிக்க டாலர்கள் மற்றும் பிரித்தானிய பவுண்டுகள் அறவே இல்லை. வெறிச்சோடிப் போய் உள்ளது. இதனால் வெளிநாட்டு தமிழர்கள், உள்ளூரில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பும் பணத்தை, இலங்கை அரசு ஊடாகவே அனுப்ப வேண்டும் என்ற ஒரு நிலையை தோற்றுவிக்க உள்ளார். இதன் முன்னேடியாக காசை வங்கியில் போடும் நபர்களை குறிவைக்க ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. இதனை லங்கா வயர் என்னும் சிங்கள அரச ஊடகம் உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது.