புதினங்களின் சங்கமம்

பருத்தித்துறை ஆதார வைத்தியசலையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தைக்கு கொரோனா!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (நவ-29) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு பச்சிளம் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிநற்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றுக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.