யாழில் ‘கொல்பவன் வெல்வான்‘ என்ற பெயருடன் கூடிய அதி சக்திவாய்ந்த புலிகளின் கிளைமோர் குண்டு இராணுவத்தால் மீட்பு!!!
யாழ்.தீவகம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பிகை நகர் பகுதியில் கிடங்கு ஒன்றில் காணப்பட்ட கிளைமோர் வெடிகுண்டு ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆறு கிலோ நிறை கொண்ட குறித்த கிளைமோர் வெடிகுண்டு காணப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்திருப்பதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த வெடிபொருளில் SN 96 எதிரியின் பக்கம் என்றும் கொல்பவன் வெல்வான் – தயாரிப்பு தமிழீழம் என்றும் எழுதப்பட்ட நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


