யாழ் பல்கலைக்கழக முன் வாயிலில் சற்று முன் பதற்றம்!!அடங்க மறுக்கும் மாணவர்கள்!வீடியோ)
கார்த்திகை விளக்கேற்ற மாணவர்களை உள்நுழைய அனுமதிக்காத பல்கலை நிர்வாகம்: அடங்க மறுத்த மாணவர்கள்!
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடு பல்வேறு தடைகளையும் தாண்டி மாணவர்களால் பல்கலையில் இடம்பெற்றது.
இன்று மாலை 6.மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை மேற்க் கொள்வதற்கு வந்த நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியொகத்தர்களால் உள்நுழைய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலையில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்க் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டுதீபங்களை ஏற்றினர்.
இந்நிலையில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் வெளயில் நின்றமையை அவதானிக்கூடியதாக இருத்தத. இராணுவ மோட்டார் வாகனங்களும் சென்றன.
கடந்த வருடம் ஒரு மாணவன் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார். பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறையை தட்டிக்கேட்க மாணவர் ஒன்றிய தேர்தலையும் நடாத்தாது பல்கலை நிர்வாகம் கொரோனாவை காரணம் காட்டி இழுத்தடிப்பு செய்து வருவதாக குழுமியிருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.




