புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தள தொடர்புகள் இல்லாத மணமகளைத் தேடும் சுவிஸ்சில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிளை

சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 37 வயதான அண்மையில் விவாகரத்தான நபர் ஒருவர் தனக்கு சமூகவலைத்தளங்களில் தொடர்புகள் இல்லாத மணமகளை கலியாணம் செய்வதற்காக தரகர்களிடம் நிபந்தனைகள் விதித்துள்ளார். சுவிஸ்லாந்தில் இருந்து வந்து யாழ் தீவகப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த 2019ம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்த பின்னர் மீண்டும் சுவிஸ்லாந் சென்றுள்ளார் குறித்த நபர். பின்னர் தனது மனைவி கொழும்பில் வசிக்கும் போது தொடர்பில் இருந்து பின்னர் வெளிநாடு சென்ற தனது உறவுக்கார குடும்பஸ்தர் ஒருவருடன் அந்தரங்கத் தொடர்புகளைப் பேணிய புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்கள் சுவிஸ் மாப்பிளைக்கு இனந்தெரியாத பேஸ்புக் முகவரியில் இருந்து அனுப்பபட்டுள்ளது. இதனை பார்த்து கடும் அதிர்ச்சியுற்ற சுவிஸ் மாப்பிளை தனது மனைவியிடமும் மனைவியின் பெற்றோரிடமும் விசாரித்த போது அது கிரபிக்ஸ் புகைப்படங்கள் என அவர்கள் சமாளித்துள்ளார்கள். இருப்பினும் அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் உண்மையானது என தனது விசாரணையின் மூலம் அறிந்து கொண்ட சுவிஸ் மாப்பிளை சுவிஸ்லாந்தில் இருந்து விவாகரத்து பத்திரத்தை அனுப்பி விவாகரத்து செய்யுமாறு தனது மனைவியை வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து தனது குட்டு வெளிப்பட்டு விட்டதால் மனைவியும் விவாகரத்திற்கு சம்மதித்து விவாகரத்து பெற்றதாக தெரியவருகின்றது. இதன் பின்னரே மாப்பிளை மீண்டும் தனக்கான துணையை தேடத் தொடங்கியுள்ளார். விவாகரத்தான தனது முன்னாள் மனைவி சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகி அதில் நட்பாக வந்த தனது துாரத்து உறவுக்காரர் ஒருவருடன் திருமணத்திற்கு முன்னரான பாலியல் தொடர்பு வைத்திருந்ததை விசாரணையில் அறிந்த பின்னர், தனக்கு வரப்போகும் அடுத்த துணை சமூகவலைத்தளங்களுக்கு அடிமையானவராக இருக்க கூடாது என கடுமையான நிபந்தனைகளை திருமணத்தரகர்களிடம் கூறியுள்ளாராம்.