புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் தாயின் மூன்றாவது கணவரால் பதின்மவயது மகள்கள் பாலியல் வேட்டை!!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில் தாயின் கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்..
வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவதுகணரால் ; மகள்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலீசார் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைதுசெய்துள்ளார்கள். 12.10.21 அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு பதின் அகவை சிறுமிகளை தாயின் மூன்றாவது கணவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளகிவந்துள்ள குற்றச்சாட்டில் தாயின் கணவர் மற்றம் பிள்ளைகளின் தாய் ஆகியோர் கைதுசெய்யப்படடு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பதின் அகவை சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைதுசெய்த முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது தனது பிள்ளைகளை மூன்றாவது தொடர்ச்சியாக கணவன் துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும்

அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் தாயாரும் கைதுசெய்யப்பட்டு கடந்த 13.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.