புதினங்களின் சங்கமம்

யாழில் காரில் பயணித்துக் கொண்டிருந்த பெண் நீதிபதிக்கு அநாகரிகமாக சைகை காட்டிய காவாலிகளுக்கு நடந்த கதி!!

யாழ்.பருத்தித்துறையில் மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு முன்னால் சென்று சைகை காட்டியதுடன் தகாத வர்த்தை பிரயோகம் செய்து நீதிபதியை அவமதித்த குற்றச்சாட்டில் 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.20 மணியளவில் பருத்தித்துறை- குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31,33 36 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறை நீதிபதி காரில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் பயணித்துள்ளார். இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர், நீதிபதியை அவமதிக்கும் வகையில் கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்த வீதித் தடையில் கடமையிலிருந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். மூவரும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

முச்சக்கர வண்டியும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.