புதினங்களின் சங்கமம்

யாழில் நடந்த கொடூரம்! பாடசாலை ஆசிரியை வாளால் வெட்டிய நபர்கள்!

பாடசாலையாழில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற நபர்களால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வள்ளியம்மன் பாடசாலையில் நடந்துள்ளது.

பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வாசல் கதவில் வழி மறித்த இருவர், ஆசிரியையை அனுகி மாணவி ஒருவர் சற்றுத் தொலைவில் அழுது கொண்டிருப்பதாக கூறி ஆசிரியையை அங்கு அழைத்துச் சென்று சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.

ஆசிரியர் மீண்டும் பாடசாலை நோக்கி தப்பியோடியுள்ளார். விரட்டிச் சென்ற கொள்ளையர்பள் பாடசாலை வாசலில் வைத்து ஆசிரியையை வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரசவ விடுமுறையிலிருந்த ஆசிரியை இன்று பாடசாலைக்கு கடமைக்கு சமூகமளிக்கச் சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதுகுப் பகுதியில் வாளால் வெட்டப்பட்ட காயங்களுடன் ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.