Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவு, மல்லாவியில் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்த இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை!!

முல்லைத்தீவு, மல்லாவியில் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்த இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை!!

முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்திற்கு உட்பட்ட வடகாடு கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்இன்று 20.09.21 காலை தூக்கில் தொங்கிய நிலையில் உடலம் இனம் காணப்பட்டு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மல்லாவி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.கணவனை பிரிந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிவரும் 31 அகவையுடைய இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவரது உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.