யாழ்ப்பாணம்-நீர்வேலியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!
யாழ்.நீர்வேலியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் நீர்வேலி பகுதியை சேர்ந்த டிலக்சன்(வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விபத்து வம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகைளில் நேற்று(சனிக்கிழமை)இரவு, யாழ்ப்பாணம்–பருத்தித்துறை வீதியில், நீர்வேலி சந்திக்கு அருகிலுள்ள ஞானவைரவர் ஆலயம் முன்பாக இடம்பெற்ற வாகன விபத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன்மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்தமையால், வீதியோரமாக இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இதன்போது,இரும்புக்கம்பி ஒன்று அவரது நெஞ்சு பகுதியில்-குத்தியுள்ளது. அதனால் படுகாயமடைந்த இளைஞனை நோயாளர்காவு வண்டி ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக,அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துசம்பவம் தொடர்பாக கோப்பாய்-பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

