சாராயக்கடை திறப்பும் அரசாங்க உத்தியோகமும், PHI மாரின் திருவிளையாடல்களும்!! நிரூபன் நற்குணராஜாவும்!!

அரச உத்தியோகமும் எங்களுடைய சனத்தின் பார்வையும்😢
ஊர் வழக்கில் “உத்தியோகம் “என்பதற்கு ஓர் விளக்கம் உண்டு.அதாவது “உத்தி” + “யோகம்”……அப்படியென்றால் தந்திரங்களை பாவித்து எமக்கு நன்மையை பெறக்கூடிய விடயமே உத்தியோகம்.
நேற்றைய சாராயப்போராளிகளின்🍺 சாகசங்களால் அண்மைய முகப்புத்தக பதிவுகள் சில எம் PHI சகோதரர்கள் பலர் இவ்வாறு உத்தியை பயன்படுத்தி யோகத்தை தவறவிட்டுள்ளோமோ எனக்கவலையடைய வைக்கின்றது.
சரிவிடயத்துக்கு வருவோம் ஆர் இந்த PHI மார்? இவங்கள் என்ன படித்தவர்கள்? இவங்களிடை Main Role என்ன? இப்படி பல கேள்விகளோடு சில குரோதங்களும் சிலர் மனதில்…..😡
மருத்துவத்துறையில் பிரதானமாக 2 பிரிவு இருக்குது.ஒரு கோஸ்டிடை வேலை வருத்தம் வரவிடாமல் பாக்கிறது.மற்றையதன் வேலை வருத்தம் வந்தால் தீவிரமடையாமல் /இறப்புவரை செல்லாமல் இருக்க முகாமைத்துவம் செய்வது.
இதில் வருத்தம் வராமல் பாடுபடும் தடுப்பு மருத்துவத்துறையில் முன்னரங்கில் பல Profile (20 இற்கும் மேற்பட்டோரின் திறமைகளை தனியொருவராக பணியாற்றும் வல்லமை உள்ள) இனை கையாள்பவரே PHI .
முக்கியமாக நோய்க்கட்டுப்பாடு (தொற்று நோய் மட்டுமல்ல ,சலரோகம் -பிரசர்-புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் ஆபத்துகாரணிகளை இனங்கண்டு அவற்றுக்கெதிராகவும் வேலைசெய்யவேண்டும்)
றோட்டிலை ஒரு “பிசுங்கான் “கிடந்தாலே அது யாரையாவது குற்றி ஒரு Acute Non communicable Disease இனை ஏற்படுத்தும் அதை அகற்றவேண்டும்,ஒரு மரக்கொப்பால் இருக்கும் Hazard /Risk இனை அகற்றவேண்டும் என்ற கண் PHI இற்கு இருக்கும்.
சுற்றாடல் சுகாதாரம்,உணவுக்கட்டுப்பாடு தொடர்பிலும் அதிபாண்டித்தியம் இருக்கும்.இதற்காக எமக்கு எத்தனையோ சட்டங்களில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இருபதுக்கும் மேற்பட்ட கடமைகளை செய்யவேண்டும்.
பாடசாலை பிள்ளைகளின் சுகாதாரம் எவ்வளவு ஒரு மகத்தான பணி.எத்தனை பிள்ளைகளின் பார்வைக்குறைபாடு,இருதய நோய்கள் உட்பட பலவற்றை MOH உதவியோடு இனங்கண்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி சரிசெய்திருக்கின்றோம்.இவை பலருக்கு தெரியாது.
தடுப்பு மருத்துவத்துறைக்கும் கடவுளின் செயலுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.அதாவது செய்யும் வேலையினால் உடனடிப்பலன் கிடைக்காது.பயணாளியால் கிடைக்கும் திருப்திகரத்தன்மையும் தாமதமாகும்.ஆனால் Curative site இல் வருத்தம் மாறிய உடனேயே நோயாளி வைத்தியரை கும்பிட்டுவிடுவார்.எமக்கு???
இப்படி பல கடமைகளை செய்வதற்காக பல அதிகாரங்கள் வழங்கப்பட்ட /பொலீசு அலுவலரின் அதிகாரங்களை பிரயோகிக்கவல்ல அதிகாரிகளே PHI ஆகிய நாங்கள். இதற்கு Advance level. Bio /Maths இல் சித்தியடைந்த வகுப்பினரை கிட்டத்தட்ட 2 வருடங்கள் பயிற்சி வழங்கி பரீட்சை வைத்து அதன் பெறுபேற்றினடிப்படையிலேயே பதவியிடங்கள் வழங்கப்படுவதுண்டு.பயிற்சியை வழங்குவது Senior Doctores ,Senior PHI இனரே.உயிர் சம்மந்தப்பட்ட விடயமென்பதால் ஒவ்வொன்றும் துல்லியமாக பயிற்றப்படும்.சமூகக்கல்வி -வரலாறு போன்று படிக்கமுடியாது.
இது இப்பிடியிருக்க நாம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் என்பதால் எமது கடமை பற்றி பொதுமக்கள் நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு Authorized officer உம் அரசினால் கௌரவ பாராளுமன்றில் இயற்றப்படும் சட்டங்களையும்/திணைகளங்களால் விடுவிக்கப்படும் சுற்று நிருபங்களையும் /வாய்மூல அவசர அறிவிப்புக்களை நடைமுறைப்படுத்துவதுடன்,அவற்றிற்கு இணங்கியொழுகுதலும் வேண்டும்.
நாமாக நினைத்தபாட்டில் எதையும் செய்ய முடியாது.Public Health system இனை இலங்கையில் அறிமுகப்படுத்திய Dr.Chellapha இன் வசனமொன்று உள்ளது.”Know your Area-Know your People “
அதன்படி பிரதேச மக்களின் புவியியல், நடத்தை சார் இயல்புகளுக்கேற்ப அப்பிரதேச மக்களின் நலன்கருதி சில முடிவுகளை அந்த Area PHI எடுத்தாகவேண்டும்.இதன்போது சில இன,மத,அரசியல் ஸ்தாபனங்களும் பாதிப்படைவது தவிர்க்கமுடியாத துன்பியல் சம்பவமாகும்.
இனி நேரடியாக விடயத்துக்கு வருவோம்.நேற்று யாழ்பாண குடிமக்கள் Bar இலை கொசு மொய்த்தது போல் மொய்த்ததற்கு எம்மீது எவ்வளவு காழ்ப்புணர்ச்சியை வார்த்தைகளாக காறி உமிழ்கின்றீர்கள்.உங்களுக்கு தெரியுமா கீழுள்ள விடயங்கள் பற்றி👇👇👇
1.எத்தனையோ PHI மார் வீட்டைவிட தொழிலிடத்திலேயே காலத்தை விடுகின்றோம்.
2.உங்களது பொறுப்பற்ற நடத்தையால் நாம் தொற்றடைந்து கஸ்டப்பட்டிருக்கின்றோம்.
3.தினசரி PCR எடுக்கும் அங்கியை அணிந்து (PPE)கஸ்டப்படும் எத்தனை PHI மார் இருக்கின்றனர்.
4.தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புக்கள்-எடுக்கிறவன் எல்லாம் என்ன ஆசைவார்த்தையா சொல்லப்போறாங்கள்.
5.எத்தனை வேளை ஊரடங்கு கடமைகளின்போது ஒருநேர உணவில்லை.
6.ஒரு நோயாளி Positive ஆனால் களத்தில் செய்யும் கடமைகளை விட 4 பக்க அறிக்கை வேறு கொடுக்கணும்.
இவ்வளவும் ஒரு துளி கடமையென்றே கூறலாம்.லீவு இருக்காது ஞாயிற்று கிழமை கூட.😡
குடிகாறக்கூட்டம் தண்ணிவிடாயிலை பாறைத்திறந்தவுடன் ஓடுது.அதற்கு Preschool இல் இருந்தே “நடத்தை மாற்ற தொடர்பாடல் “(Behavior change Communication) செய்து இனிவாற சந்ததியை காப்பாத்தணும்.யுத்தத்தின் வடுவில் அகப்பட்ட இந்த “மண்டைக்கசாயங்களை” நாம் என்ன செய்ய.
பிரதேச நன்மைகருதி PHI மார் எடுத்த கடந்தகால தீர்மானங்களை Bar திறப்புடன் ஒப்பிட்டு விமர்சிக்காதீர்.எமக்கென்றும் ஓர் கடமை வரையறை உண்டு.
ஒருத்தர் எழுதியிருக்கின்றார் PHI மாரின் கல்வியறிவு பற்றி.அப்பு ராசா எங்களுடைய Public health இல் நாங்கள்தான் King.அவற்றுள் வேறு விடயங்களுடன் சேர்த்து வாதிடாதீர்.எமது வேலை 4 கட்ட தடுப்பும் தான்.
Primordial prevention
Primary prevention
Secondary prevention
Tertiary prevention
இவர்கள் கல்வியறிவுக்கு இந்த கொரணாவுக்கு பிறகு டொக்ரர் லெவலுக்கு நிக்கீனம் என்று எழுதியவர் இதை வாசித்து அறிந்துகொள்ளட்டும் எமது(PHI)இன் வகிபாகம் என்னவென்று.
ஒரேயொரு கவலை-இப்படி அடிக்கடி மாறும் பேஸ்புக் போராளிகளுக்காகவோ எமது சகோதரர்கள் 15/- ரூபா Surgical mask உடன் களத்திலை கஸ்டப்படுறாங்கள் என்று.பேசாமல் உத்தியை கையாண்டு யோகத்தை பெற்றிருக்கலாம் என எண்ணவைத்துவிட்டீர்😢😢😢😢😢
நூற்றாண்டை கடந்த எம் சேவையைப்பற்றி எனியும் வகுப்பெடுக்க வைச்சிடாதேங்கோ.
அன்புடன்
நற்குணராசா -நிறூபன்❤
PHI -Urumpirai
error

Enjoy this blog? Please spread the word :)