யாழில் உறவினரைக் கொலை செய்துவிட்டு திருகோணமலையில் ஓடிப் போய் மறைந்திருந்தவருக்கு நடந்த கதி!!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தர் ஒருவரை குத்திக்கொலை செய்துவிட்டு தலைமறைவானார்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுவந்தவர்களில் ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 17ஆம் திகதி வல்வெட்டித்துறையில் நெருங்கிய உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலையில் முடிந்திருந்தது. சம்பவத்தில் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த கொலைச் சம்பவத்துடன் நெருங்கிய உறவினர்கள் இருவர் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.
இந்நிலையில் அவர்களில் ஒருவர் திருகோணமலையில் தலைமறைவாகியிருப்பதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் திருகோணமலை பொலிஸார் ஊடாக குறித்த நபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அதனை அடுத்து திருகோணமலை பொலிஸார் குறித்த சந்தேகநபர்களில் ஒருவரைக் கைது செய்திருப்பதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மற்றைய சந்தேக நபர் தொடர்ந்தும் தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

