பலாங்கொடை நீர்வீழ்ச்சியில் பாலியல் உறவு கொண்டவர்கள் இவர்கள்தான்!!
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை , பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ
நீர் வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில்
பதிவேற்றிய சம்பவத்தில், குறித்த ஆபாசக் காட்சிகளில் தோன்றிய இளைஞன் மற்றும் யுவதி கைது
செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் கணினி குற்ற
விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழு அவர்களை இன்று மாலை கைது செய்தனர்.
மஹரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரும் எல்பிட்டியவை சேர்ந்த தற்போது
பன்னிப்பிட்டிய பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 25 வயதுடைய யுவதியுமே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும், ஆபாசக் காட்சிகளை எடுத்து இணையத்தில் பதிவேற்றுவதை தமது தொழிலாக
செய்து வந்துள்ளதாக விசாரணையாளர்கள் கூறினர்.
இந் நிலையில் பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்ட அந்த ஆபாச வீடியோவை உடனடியாக
நீக்குமாறு அதனை பதிவேற்றிய இணையத்தளத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் கணினி குற்றவிசாரணைப் பிரிவினர் ஊடாக
இதற்கான அறிவித்தல் அனுப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால்
தல்துவ குறிப்பிட்டார்.

