புதினங்களின் சங்கமம்

பாரிய வன்முறை!! கொழுந்து விட்டெரிகின்றது குருநாகல்!! மறு அறிவித்தல் வரை ஊரடங்கு!!

குருநாகல் மாவட்டம் ஹெட்டிப்பொல அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் வயல்களில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு இதுகுறித்து அங்கிருந்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவரை மேற்கோளிட்டு கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கொட்டம்பிட்டிய அரபுக்கல்லூரிக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் கூறுகிறார்.

இதேவேளை குரு நாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைக்கொண்ட வட மேல் மாவட்டத்தில் மறு அறிவித்தல்வரை உடன் அமுலுக்கு வரும்வகையில் அவசர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பெருந்தொகையான படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

 

மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று பிறப்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து கொபேகனே மற்றும் ரஸ்நாயக்கபுர பகுதிகளுக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்த மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.