புதினங்களின் சங்கமம்

இலங்கையில் மீண்டும் வன்முறை!! சற்று முன் சமூகவலைத்தளங்களுக்கு தடை!!

இலங்கையில் மீண்டும் கலவர அச்சம் எழுந்துள்ளதால் சமூகவலைத்தளங்களை சற்று முன் இலங்கை அரசு முடக்கியுள்ளது.

குருணாகல் மாவட்டத்தில் மூன்று பள்ளிவாசல்கள் மீது இன்று (13) திங்கட்கிழமை காலை
இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் நடப்பட்டுள்ளன.

கின்னியம மஸ்ஜிதுல் தக்வா ஜும்மா பள்ளிவாசல் , மஸ்ஜிதுல் அப்ரார் தக்கியா பள்ளிவாசல்
மற்றும் மஸ்ஜிதுல் ஆயிஷா தக்கியா பள்ளிவாசல் ஆகியவை மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்தியோர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, சிலாபத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து சிலாபம் நகரில் உள்ள
பள்ளிவாசல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வுளை

குளியாப்பிட்டிய, பிங்கிரிய ,தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுட்டுள்ளது.

12ஆம் திகதி 11.55 மணியிலிருந்து 13ஆம் திகதி காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய – கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது தாக்குதல் நடதத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஏராளமானோர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்ட நிலையில், உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.