கோடிகளை அள்ளி இறைக்கும் சிங்கள வர்த்தகரும் யாழ்ப்பாணத்தின் வட்டி வர்த்தகர்களும்!
இலங்கையில் வர்த்தகர் ஒருவரின் செயற்பாடு குறித்து அனைத்து மக்களாலும் அதிகம் பேசப்படுகிறது.
களனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.
ஒரே நாளில் இரண்டரை கோடி ரூபாவை இவ்வாறு அவர் மக்களுக்கு வழங்கியுள்ளார்.உனுபிட்டிய, நாகேன பகுதியில் நேற்று மக்களுக்கு ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்ற வர்த்தகரே தனது சொந்த நிதியில் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.
புலம்பெயர் தமிழர்கள் பலரும் உள்ளூர் பெரிசுகளும்,வர்த்தகர்களும் வட்டி பணத்தை ஒரு நாளுக்கு பத்து தடவை எண்ணி எண்ணி அடுக்கி வைக்கும் ஊரில்,வங்கிகளில் வட்டி சண்டை போடும் இரக்கமேயில்லாத பெரிசுகள் எல்லாம் இன்னும் உயிரோடு இருக்க..
சிங்கள மண்ணில் ஒருவன் நல்லதை செய்திருக்கிறான்.பாராட்ட தோன்றுகின்றது…எங்கள் மண்ணில் பாதிக்கு பாதி தேய்ஞ்சதுதான் மீதி..வளர்ந்த எவருக்கும் மண்ணில் ஈடுபாடு இல்லாமல்,மதில் உயர்த்தி கட்டுவதிலும் கட்டின கோவிலை மேலும் பெரிதாக கட்டுவதிலுமே இருக்கிறார்கள்.
நாடு இனம் என்பதன் பொருளை தமிழர்கள் அறிந்ததாக இல்லை,அதுவும் தமக்கு எதாவது தனிப்பட்ட நலன்கள் இருக்கும் என்றால் மட்டுமே அதில் கவனம் செலுத்துவார்கள்.இங்கு கொடுப்பதுதான் கிடைக்கும் என்ற பிரபஞ்ச விதியை தவிர்த்து எது கிடைச்சாலும் அதை சேமிக்கிறன் என்ற பெயரில் மாசுபடுத்துகிறார்கள்
கெட்டிதனமாக வாழ்கிறோம் என்று தமக்கு தாமே நினைத்து கொள்வார்கள்,கெட்டிதனம் என்ன என்று கேட்டால்? பணத்தை வட்டிக்கு விட்டு குட்டி போட வைப்பது,பொருட்களை நேரம் பார்த்து உயர்த்தி விற்பது,அரசாங்க வேலையை எடுத்து நோகாமல் வாழ்வது என்று ஒரு வட்டத்தை உருவாக்கி குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி கொண்டுள்ளனர்.
இவர்களுடன் பேசுவது,அட்வைஸ் பண்ணுவது எல்லாம் புடிக்காத ஒன்று,நீ யார் எங்களுக்கு நல்லது சொல்ல என்ற எகத்தாளமே அவர்களினுள் நிறைந்திருக்கும்..

