முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு: ஒருவர் காயம்! (Photos)
முல்லைத்தீவு சுவாமி தோட்டப்பகுதியில் குப்பைக்கு தீமூட்டியபோது குண்டு வெடித்ததில் அங்கு பணியாற்றி வந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைதைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை சுவாமி தோட்டம் தென்னம் தோட்டப்பகுதியில் குப்பைகளை கூட்டி எரித்த போது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த வெடிப்பு சம்பவத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றும் காணப்பட்டுள்ளது.


