வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி! மக்கள் கொதிப்பு!! (காணொளி இணைப்பு)
மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று மாலை மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது மெய்பாதுகாவலரால் துப்பாக்கிய பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்கமுயன்ற நிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் டி.ஜி.என்.விஜயசேன உட்பட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.
இதே வேளை
அமைச்சர் ச.வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச் சூட்டினால் ஒருவர்
உயிரிழந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கிராமத்தவர்கள் மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியை
மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சுமார் 15 நிமிடங்கள் அளவில் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் விசேட அதிரடிப்படையினரும், பொலிசாரும் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை
அங்கிருந்து அகற்றினர்.
மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டிற்கு
முன்பாக இன்று மாலை 5.10 மணியளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
மகாலிங்கம் பாலசுந்தரம் (34) என்ற டிப்பர் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரும், அவருடன் முச்சக்கர வண்டியில் வந்தவரும் மதுபோதையில் இருந்ததாக தகவல்
வெளியாகியுள்ளது.
அவர்கள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தருடன்
முரண்பட்டு, மோதலில் ஈடுபட்ட பின்னர் துப்பாக்கிச்சூடு நடந்தது.




