யாழில் கொரோனா பேரூந்து மோதி ஒருவர் பலி!! பதற்றமான சூழ்நிலை!! இராணுவம் குவிப்பு!!

கொரோனா நோயாளிகளை ஏற்றி வந்த பேருந்து மோதியதில், துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவர்
உயிரிழந்தார். இதனால் கொந்தளிப்படைந்த பொதுமக்கள் பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியதால்
பரபரப்பு ஏற்பட்டது.

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்தது.

தென்பகுதியிலிருந்து 5 பேருந்துகளில் கொரோனா நோயாளிகளை அழைத்து வந்த பேருந்து
தொடரணியில் வந்த பேருந்து ஒன்று, துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவரை மோதியது.

சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (70) என்ற முதியவரே உயிரிழந்தார்.

இதையடுத்து கோபமடைந்த அந்த பகுதி மக்கள் பேருந்துகளின் மீது கற்களை வீதி தாக்கியுள்ளனர்.

அவர்களை கட்டுப்படுத்த இராணுவம் முயல, முறுகல் நிலை ஏற்பட்டது.

பேருந்துகளை தாக்கிய குற்றச்சாட்டில் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

error

Enjoy this blog? Please spread the word :)