புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பயணத்தடை 7ம் திகதிக்குப் பின்னரும் நீடிக்கும் அறிகுறி!!

நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை தளர்த்தப்படுவது சந்தேகமே..! பொதுச் சுகாதார
பரிசோதகர்கள் சங்கம் கூறுகிறது..

நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடையை நீக்குவது சந்தேகமே என பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளபோதும் மக்கள் கூட்டம் அதிகமாகக்
காணப்படுவதாகவும் நகர்பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் வாரம் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் இருப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.