யாழ் பல்கலை நினைவேந்தல் சுடரை காலால் உதைத்து தள்ளிய காவாலி காண்டீபன்!! நடந்தது என்ன??
யாழ் பல்கலை நினைவேந்தல் சுடரை இன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஏற்றிய போது அங்கு வந்த யாழ் பல்கலைக்கழக தலைமைக் காவலாளி சுடரைக் காலால் உதைத்து கீழே விழுத்தி அணைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் அங்கு சற்று நேரம் பதற்றமான சூழ்நிலை உருவாகியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்காணிப்புக்கள் , தடைகளை தாண்டி உயிரிழந்த எம் உறவுகளுக்கு நாங்கள் உணர்வு பூர்வமாக
ஏற்றிய சுடரினை காவலாளி காலினால் தட்டி அப்புறப்படுத்திய செயலானது எமது இறந்த
உறவுகளை அவமதிக்கும் செயலாகும். என கவலையுடன் மாணவர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தினுள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவிடாது தடுக்கும் நோக்குடன்
நேற்றைய தினம் முதல் , பல்கலை கழக சூழலில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு,
புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் மதியம் மாணவர்கள் தடைகளை தாண்டி வளாகத்தினுள் உள்ள நினைவு
சின்னம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
அந்நிலையில் அதனை அவதானித்த பல்கலைக்கழக காவலாளி காண்டீபன் நினைவிடத்திற்கு வந்து மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளார்.

ிரு

