புதினங்களின் சங்கமம்

இந்தியாவில் இருந்து படகு மூலம் வந்தவர் யாழில. கைது !!

யாழில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் பயணித்த வர்த்தகர் ஒருவர் கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கடற்படையினர் மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் இணைந்து கைது செய்துள்ளனர்.
யாழில் இருந்து இந்திய நுழைவு விசா பெற்று ஏப்பிரல் மாதம் இந்தியா சென்ற ஒருவர் கடல் மார்க்கமாக படகு உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபா செலுத்தி நேற்று முன்தினம் நாட்டிற்குள் இரகசியமாக பயணித்துள்ளார.
இவ்வாறு பயணித்தவர் மன்னார் பேசாலை வழியாக வருகை தந்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பேரூந்தில் பயணித்துள்ளார். இதனை அறிந்து கடற்படையினர் நேற்றைய தினம் குறித்த வர்த்தகரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சங்காணையைச் சேர்ந்த வர்த்தகர் காரைநகரில் கடற்படையினரின பராமரிப்பில் உள்ள கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா இலங்கை இடையேயான விமான சேவை நிறுத்தப்பட்டதனால் கடல்வழியாக திருட்டுத்தனமாக உட் பிரவேசிப்போர் தொகை அதிகரித்துள்ளது.