Home புதினங்களின் சங்கமம் கர்ப்பிணி அரசஊழியர்கள் வேலைக்கு செல்ல தேவையில்லை!! புதிய சுற்றுநிரூபம் வெளியாகின்றது

கர்ப்பிணி அரசஊழியர்கள் வேலைக்கு செல்ல தேவையில்லை!! புதிய சுற்றுநிரூபம் வெளியாகின்றது

நாட்டில் தீவிரமடைந்துள்ள கொரோனாப் பரவல் காரணமாக அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன், அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச்செல்ல அந்நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, கர்ப்பவதிகளாக உள்ள ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று நாளை வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.