சுமந்திரன் எம்.பி. பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய அவரது வாகனம் முழுமையாகச் சேதம் அடைந்துள்ளபோதும் தனக்னோ அல்லது வாகனத்தில் பயணித்த எவருக்குமோ காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 3.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவ நேரம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மழை பெய்துகொண்டிருந்த நிலையில் இந்த விபத்து சம்பவித்தது.
விபத்தை அடுத்து வோறொரு வாகனத்தின் மூலம் சுமந்திரன் கல்முனைக்குச் சென்றடைந்தார்.

