புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் மண்மாபியாக்களின் வாகனத்தால் அடித்து ஒரு தமிழர் கொலை!! !(Photos)!!

மட்டக்களப்பு மாவட்டம் நீர்வளத்தாலும் விவசாய நிலங்களால் சூழப்பட்ட வனப்புமிக்க பிரதேசம் இப்பொழுது அப்பிரதேசங்கள் சதுப்பு நிலங்களாகவும் உருவெடுக்கும் வண்ணம் தற்போதைய மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர்களின் அசமந்தத்தால் இடம்பெறுகின்றது,
சமுர்த்தி காசை கொடுப்பதில் போட்டி போடும் பாராளமன்ற உறுப்பினர்கள் மண்கடத்தலையோ நில ஆக்கிரமிப்புகளுக்கு வாய் திறக்காத நிலை காணப்படுகின்றது.
நேற்றையதினம் 2021.04.24
செங்கலடி பிரதேசத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவு காயங்குடா வீதியில் மண்மாபியாக்களால் ஏற்றிவந்த மெசினொன்று இரு நாட்களுக்கு முன்பு பழுதடைந்ததால், அவ்விடத்திலேயே மண்ணை பறித்துவிட்டு மெசினை பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர்.
பறிக்கப்பட்ட மண் வீதியை மறித்து காணப்படுவதை சற்றுமே யோசிக்காமல் இரு நாட்களுக்கும் மேலாக அவ்விடத்திலேயே கிடப்பதை யாருமே கண்டு கொள்ளவில்லை.
நேற்று 24-04-2021 அன்றுகாலை முந்தன்குமாரவெளி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றிருந்த உன்னிச்சை எட்டாம் கட்டையை சேர்ந்த நிதன் (33) என்ற குடும்பஸ்தர், வேலை முடிந்து பகல் 11.00 மணியளவில் காயங்குடா வீதியூடாக மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி செல்கையில்,
எதிரே வீதியில் காணப்பட்ட மண் மேட்டை கண்டதும் வேகத்தை குறைத்த போது,
அதி வேகமாக பின்னால் வந்த மற்றொரு மண்மாபியாக்களின் உழவு மெசினானது இவரது பைக்கினை மோத, சகோதரர் நிதன் தவறி கீழே விழ,
மெசினின் பெரிய டயர் நிதனின் தலையில் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்த சோக சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
இறந்தவரும் மட்டக்களப்பை சேர்ந்த ஏழை கூலித்தொழிலாளி கொலை செய்தவரும் மட்டக்களப்பை சார்ந்தவர்கள்,
மட்டக்களப்பின் ஒரு முக்கிய பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான; பாலமடு வடக்கை சேர்ந்த
உரிமையாளரால் ஒருவரால் 15 மண் பேர்மிட்டின் நிர்வகிக்கப்படுகின்றது.
அவர்களுக்குரிய மண் பேர்மிட் றூட் பங்குடாவெளிக் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வேப்பவட்டுவான் ஊடாக. ஆனால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தலையிட்டு முந்தன்குமாரவெளி ஆத்தினுடாக றூட் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த மண் பேர்மிட்டுடன் தற்போது வழங்கப்பட்ட பேர்மிட்டும் சேர்த்து 100 பேர்மிட்வரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த 100 பேர்மிட்டுக்கும் தலா 5 டக்டர் வீதம் 500 டக்டர்கள் மண் அள்ளுகின்றன.
இவ்வாறு அளவுக்கதிகமான டக்டர்கள் வீதியில் பயணித்ததால் வீதியால் சென்றுகொண்டிருந்த 40 வயதுடைய ஒருவரை அடித்துக் கொண்றுள்ளார்கள்.
கடந்த தேர்தலில் அபிவிருத்தி வேண்டி ஓட்டுப் போட்ட ஒவ்வொருவரும் சிந்தியுங்கள்! இந்தக் கொலையில் உங்களிற்கும் பங்குள்ளதா என்று!

 

May be an image of indoor