பொலிஸார் நால்வர் உட்பட யாழில் 07 பேருக்கு கொரோனா! ஒருவர் மரணம்!!

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 07 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆறு பேர்,

(நால்வர் பொலிஸார், இருவர் நவீன சந்தைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள், இருவரும் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்)

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் (தனிமைப்படுத்தல் விடுதி)

ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 350 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாக இன்று காலை அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களில் புதிய மரணம் பற்றிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நபர் பருத்தித்துறை வீதி, நல்லூர் எனும் முகவரியைச் சேர்ந்த 59 வயதுடைய R.சிவசண்முகநாதன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மரணத்துடன் யாழ்.குடாநாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)