ஏ9 வீதியில் கிடந்த பெரிய சூட்கேஸ்!! பதற்றத்தில் ஏ9 வீதி மூடப்பட்டது (Photos)
ஏ9 வீதியில் ஏற்பட்ட பதற்றத்தால் போக்குவரத்துக்கள் சிறிது நேரம் முடங்கியிருந்தன.வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் உள்ள பேருந்துதரிப்பிடத்தில் அநாதரவாக கிடந்த பயண பொதியினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடுவாகன போக்குவரத்துக்களும் சுமார் அரை மணிநேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.பேருந்து தரிப்பிடத்தில் பெரிய பயண பொதியொன்று உரிமை கோரப்படாத நிலையில்நீண்ட நேரமாக காணப்பட்டமையால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல்வழங்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர் ஏ9 வீதியில்போக்குவரத்தை தடை செய்ததோடு, குறித்த பகுதியில் பாதுகாப்பையும்பலப்படுத்தி, பொதியை பரிசோதனை செய்தனர்.இதன் போது குறித்த பயண பொதியினுள் ஆபத்தான பொருட்கள் ஏதும் இல்லை எனதெரியவந்த நிலையில் ஒமந்தை பகுதியில் இருந்து வருகைதந்த இளைஞன் ஒருவன்குறித்த பொதி தன்னுடையது எனவும், பயணத்திற்காக காத்திருந்த போது பேருந்தைதவறவிட்டமையினால் தனது குடும்பத்தினரை பேருந்தில் ஏற்றுவதற்காக மோட்டார்சைக்கிளில் துரத்தி சென்ற சமயம் குறித்த பொதியை இங்கு வைத்து சென்றதாகஇராணுவத்தினரிடம் தெரிவித்தார்.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அவரது மனைவியும் மகளும் வருகைதந்தநிலையில் அவர்கள் தொடர்பாக இராணுவத்தினர் தகவல்களை பெற்றதன் பின்னர்அங்கிருந்து செல்ல அனுமதித்திருந்தனர்.