கொரோனா!! யாழ்.இந்துக்கல்லூரி முடக்கம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் மகன் கல்வி பயிலும் யாழ்.இந்துக்கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் நாளை இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்றுக்கு உள்ளானவராக அடையாளம் காணப்பட்டுள்ள நவாலியைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தரின் மகன் யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்.

தரம் பத்தில் கல்வி பயிலும் குறித்த தாதிய உத்தியோகத்தரின் மகன் கல்வி கற்கும் வகுப்பு மாணவர்கள் இன்று முற்பகலே வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

முதலாம் தவணை நாளை விடுமுறை விடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாளை இந்துக்கல்லூரி நடைபெறாது என்று மாணவர்களுக்கு அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

error

Enjoy this blog? Please spread the word :)