வடக்கில் சம்பத் வங்கி ஊழியரிற்கு கொரோனா!!
வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் மன்னார் சம்பத் வங்கியில் பணியாற்றும் மாத்தறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மருத்துவ பீட ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 667 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் ஒருவர் மன்னார் சம்பத் வங்கியின் கிளையில் பணியாற்றும் மாத்தறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் நேற்றுச் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மீளவும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சம்பத் வங்கியின் மன்னார் கிளை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மாத்தளையில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு கோரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆடைத் தொழிற்சாலை சாரதி ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தொற்றாளர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்.
யாழ்ப்பாணம் வருகை தருவோருக்கு எழுதுமட்டுவாழ் வைத்து தடையில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

