வட மாகாணம்: CTB பணியாளர் ஒருவர் உள்ளிட்ட 21 பேருக்கு தொற்றுறுதி!
யாழ் சண்டிலிப்பாயைச சேர்ந்த CTB பணியாளர் ஒருவர் உள்ளிட்ட 21 பேருக்கு வடமாகாணத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 275 பேரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அருவி இணையத்திற்கு சற்று முன்னதாக தெரிவித்தார்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த CTB பணியாளர் எனவும், ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் தொற்று உறுதி செய்யபட்டிருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
வவுனியா நகர் கொத்தணி தொடர்பில் இன்று மாலை வெளியாகியிருந்த முடிவுகளின் அடிப்படையில் 13 பேருக்கு தொற்று உறதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவ் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழ ஆய்வுகூட பரிசோதனையின் அடிப்படையில் வவுனியா நகர் கொத்தணியுடன் தொடர்புபட்டு மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வவுனியா நகர் கொத்தணி தொற்று 279 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்க்கது.

