உண்மை கத!! யாழ் பல்கலையில் இனந்தெரியாத நபர் செய்த அலங்கோலம்!! (Photos)

நேற்றைய தினம் யாழ் பல்கலையில்
ஒருநபர் வந்திருந்தார்
இரண்டு மணி இருக்கும் மேல்மாகாணத்தைச் சேர்ந்த இலக்கதகடு அவர் வந்த மோட்டார்சைக்கிள்.கொச்சைத்தமிழும்கூட ,அந் நபர் நினைவுத்தூபி அழிப்பிற்க்கு ஆதரவாக தானும் குரல் கொடுப்பதாக கூறினார் ,தகாத வார்த்தைப்பிரயோகங்கள் மற்றும்
சம்பவ இடத்தில் ஒன்றுகூடியவர்களை எச்சரிப்பது ,ஆதரிப்பது போன்ற
செயற்பாடு இத்தனைக்கும் முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருந்தார் .
போராட்டக்காரர்களால் தங்களை அடையாளப்படுத்துமாறு கேட்கப்பட்டும் அவர் அதனை செய்யவில்லை பின்னர்
விலகிச்சென்றார் .
எம்மிடையே இது திட்டமிட்டு போராட்டநடவடிக்கையை குழப்பச்செயயப்ட்ட ஏற்பாடாக கருதப்படுகிறது .
இராணுவவாகனங்கள் அதிகளவான
இராணுவக்குவிப்பு ,பொலீஸார் குவிப்பு ஒடுக்குமுறையை பிரதிபலித்தது.
அதிகளவான புலனாய்வாளர்கள் குழுமியிருந்தார்கள்.
இத்தனைக்கும் அதில் பல தமிழர்கள் காணப்பட்டார்கள்.
எப்ப சந்தர்ப்பம்கிடைக்கும்
படம் எடுத்து வெளிநாடுபோய்
குடியுரிமை பெறலாம் என ஒருசிலர்
வந்த உடன ஊடகவியலாளர்களையும் மீறி அழகாக பிறேம் வைத்து தங்களை படம்பிடித்துக்கொண்டனர்.
டக்ளஸ் ,அங்கஜன் உள்ளிட்டோரை காணவில்லையாம் சிலர் கேட்கிறார்கள்.அரசின் அடிவருடிகள் எப்படி அங்கு வருவார்கள் இதில் அவர்களுக்கும் பங்குண்டு தானே .
யாழ் பல்கலையில் ஈ பீ.டீபியின் தலையீடில்லாமல் துணைவேந்தர் தெரிவு இடம்பெற்றிருக்கிறதா?
துணைவேந்தர் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு போன்றவற்றின் அழுத்தம் காரணமாக தேவையற்ற கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றார் .
இதில் உள்ளவர்களை இயக்குவது அரச இயந்திரம் தான் .
இன் நிலையில் யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் தளத்தில் அது தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ளார்.
முன்னைய உபவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் பதவிநீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை நிர்மூலமாக்காமையே காரணம்.
தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன என டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுதான் அவர் பதவிவிலகலுக்கும் காரணம்.
போராட்டங்கள் வலுவானதாக இருக்கவேண்டும் அது மக்கள் சக்தியால் முடியும் ஏனெனில் பலமான கட்டமைப்பு ஒன்று எம்மிடம் இல்லை ஆரோக்கியமான பொது அமைப்பை நாம் கட்டமைக்க வேண்டும்.
அரசியல் குளறுபடிகளால் தமிழ்மக்கள் பேரவை தோல்விகண்டது குறிப்பிடப்படவேண்டும் என நினைக்கிறேன் ஆகவே அரசியல் சாயங்கள் தவிர்ககப்படவேண்டும்.
உணர்வுகளை விற்றுவிடாதீர்கள் !
முகநூல் உணர்வாள்களிடம்
தாழ்மையான வேண்டுகோள் !
தயவு செய்து பங்களிப்பு செய்ய முடிந்தால் செய்யுங்கள் ஏனெனில்
வெறுமனே முகநூலில் மட்டும் உணர்ச்சிவசப்படுவது தான் சில காலங்களாக தொடர்கிறது .ஆனால்
போராட்டகளத்தில் குறிப்பிட்டோரே கலந்து கொள்கின்றனர்.
இது முதல் தடவைஅல்ல
காணாமல் ஆக்கப்பட்டால் அவர்களின் உறவுகள் தான் போராடவேண்டுமா?
காணிமீட்பில் அவர்கள் தான் போராட வேண்டுமா?
ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகத்தானே தங்கள் உயிர்களை கூட மதிக்காமல் போராடி மடிந்தார்கள் எத்தனையோ இளைஞர்கள் சிந்தித்து ஒன்றுகூடுங்கள்.

தமிழ்ஈசன் முபீசன்  Facebook

Image may contain: one or more people, people standing and outdoor Image may contain: motorcycle and outdoor, text that says "HP BIN 5228"No photo description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)