புதினங்களின் சங்கமம்

தொண்டமானாறு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மூவர் கைது!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சியின் தொண்டமானாறு கடற்பரப்பில் ஒரு படகில் மூவரும் கரைக்கு நெருக்கமான பகுதியில் மீன்பிடி நடவடிக்யைில் ஈடுபட்டிருந்தபோதே கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனாத் தொற்று இல்லை என்றும் எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் தொற்று இல்லை என்றால் 13 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.