நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டிய மீன்பிடி: இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

எல்லை தாண்டி அத்துமீறி யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தெரிவயருகையில்,

இந்தியாவின் தமிழ்நாடு புதுக்கோட்டை மவாட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக விசைப்படகில் புறப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட விசைப்படகையும் அதில் இருந்த நான்கு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடவடிக்கையினை முன்னெடுக்க இருப்பதாகவும், கொரோனாத் தொற்று அபாயம் காரணமாக விசாரணையின் பின்னர் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)