யாழ் காங்கேசந்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சீரற்ற காலநிலையால் சரிந்து விழுந்தது!!(Photos)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் தனியார் விடுதிக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் நேற்று இரவு காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்து விழுந்துள்ளது.
குறித்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பான அவதானிப்புகள் பெறப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்றிரவு யாழில் நிலவிய மழையுடன் கூடிய அசாதாரண காலநிலையின் தாக்கத்தின் காரணமாக குறித்த கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


