PHI மீது கறித் துப்பிய கொரோனா சிங்கள நோயாளி!! பரபரப்புக் வீடியோ காட்சி
பண்டாரகம அட்டுலுகம பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவரை அழைத்துச்செல்ல வருகை தந்த பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது உமிழ்ந்த நபரை முழுமையாக குணமடைந்ததன் பின்னர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அட்டுலுகம பகுதியில் நேற்று முன்தினம் குறித்த கொரோனா தொற்றுக்குரியவரை அழைத்துவர சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர் மீது உமிழ்ந்துள்ளதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அழைத்துச்செல்வதற்காக வருகை தந்த வாகனத்தின் கதவினையும் பலமுறை திறந்து வேகமாக மூடி அதிகாரிகளை நிந்தித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
கீழுள்ள காணொளியில் அவரின் நடவடிக்கைகளை பார்வையிடலாம்.

