டிசம்பர் 2ம் திகதி குடாநாட்டை புரட்டிப் போட வருகின்றது கொடூர ‘புரவி’ புயல்!!
மலேசியாவால் ‘புரவி்’ என பெயர் சூட்டப்பட்ட மிகக் கடுமையான சேதங்களை உண்டாக்கக்கூடிய புயல் ஒன்று யாழ்குடாநாடு உட்பட வடக்கு கிழக்குப் பகுதிகளை துவசம் செய்து புரட்டிப் போடும் என அச்சமான சூழ்நிலை எதிர்நோக்கப்படுகின்றது. வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின் படி 150 மி.மீ மேலான கடும் மழைப் பொழிவும் 100 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் சூறைக்காற்றும் அடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் கீழே வரைபடங்களாக தரப்பட்டுள்ளன.




