ஜோதிடம்

இன்றைய இராசி பலன் (25.04.2019)

மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். புதிய யோசனைகள் பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்புகள் வரும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கடகம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம்தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

துலாம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். நட்பு வட்டம் விரியும். புது வேலைக் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோ
கத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல், வீண் டென்ஷன், அலைச்சல் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கும்பம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.