தீவிரவாதிப் பெண் என கூறியவர்களில் ஒரு பெண் தீவிரவாதியல்ல!! பொலிஸ் தவறை ஒத்துக் கொண்டது!!( Photos)
தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஒருவருடைய புகைப்படம் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடப்படும் நபர்களில் அப்துல் காதர் பாதிமா காதியா என்ற பெண்ணும் உள்ளடங்குகின்றார்.
எனினும் குறித்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கு பிரபல எழுத்தாளரான அமாரா மஜீட் என்ற பெண்ணுடைய புகைப்படத்தைதே தவறுதலாக வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட அமாரா மஜீட் என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தினூடாக உண்மையை விளக்கியுள்ளார்.
இதையடுத்து தாம் தவறுதலாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டு பொலிஸ் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.