புதினங்களின் சங்கமம்

நிவர் புயல்: பருத்தித்துறையில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவானது!

‘நிவர்’ புயல் வலுவடைந்து வரும் நிலையில் அதிகாலை 5.00 மணி வரையான நிலவரத்தின் அடிப்படையில் அதிகூடிய மழைவீழ்ச்சி யாழ். வடமராட்சி பருத்தித்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இது குறித்து யாழ் பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி வ.பிரதீபன் தெரிவிக்கையில்,

‘நிவர்’ புயல் நகர்வு காரணமாக இன்று (நவ-25) அதிகாலை 5.00 மணி வரையான நிலவரத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் 24.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக பருத்தித்துறையில் 103 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவது கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ‘நிவர்’ புயல் காரணமாக கடந்த 24 மாணி நேரத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.