புதினங்களின் சங்கமம்

திருகோணமலை மீனவனை 2 துண்டாக கடித்து சாப்பிட்ட பாரிய முதலை!! (Video)

திருகோணமலையில் முதலைக்கு இரையான மீனவர்- இரண்டு துண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!
திருகோணமலை- தம்பலகாமம் வடிச்சலாறு கலப்பு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றவர் முதலை கடித்த நிலையில் யோகேஸ்வரன் (55வயது)சடலமாக இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம்-வடிச்சலாறு கலப்பு பகுதிக்கு நேற்று (23) பிற்பகல் மீன்பிடிக்கச் சென்ற நபர் வீட்டுக்கு வரவில்லை என தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் காணாமல் போன நபரின் உறவினர்கள் குறித்த கலப்பு பகுதியில் தேடுதல் நடாத்திய போது முதலை கடித்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.